பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள கோரிக்கை
தற்போது மீன்பிடி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் தலையிடுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயர் இல்லத்தில் இன்று ஆயரை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் தீப்பரவல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் தற்போதைய கோவிட்-19 ஆகியவற்றின் விளைவாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கர்தினால் அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவுக்கு காவிந்த ஜெயவர்தன தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நிலையில் தமது கோரிக்கை விடயத்தில் தனது நிலைப்பாட்டை விரைவில்
வெளியிடுவதாக கர்தினால் உறுதியளித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
