சொத்துக்கள் - பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம்
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த திருத்த சட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ள நபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள பதிவிறக்கம்
மேலும், இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அதனை ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து (www.ciaboc.gov.lk) பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri