கொழும்பில் நடுவீதியில் வைத்து வயோதிப தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்
வயோதிப தந்தை ஒருவரை வீட்டிற்கு வருவதற்கு இடமளிக்காமல் கொடூரமாக தாக்கும் மகள் மற்றும் பேரப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மகள் மற்றும் பேரப்பிள்ளை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்த போது இந்த சம்பவம் கொழும்பு, நாரஹென்பிட்டி - தாபரே மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மகள் மற்றும் பேரப்பிள்ளை தந்தையை கொடூரமாக தாக்கியதுடன், அவசியம் என்றால் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
மகளின் தாக்குதலினால் படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் கைது செய்யப்பட்ட மகள் மற்றும் பேரப்பிள்ளை பிணையில் விடுதலையாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri