அம்பாறையில் சுழற்சி முறையிலான அகிம்சை போராட்டம் இன்று ஆரம்பம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கி அகிம்சை வழியிலான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கல்முனை திரௌபதி அம்மன் ஆலயமுன்றலில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.
இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச ரீதியில் நீதி வேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுழற்சி முறையிலான போராட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நாவிதன் வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி , அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, தாமோதரன் பிரதீபன் உள்ளிட்டோருடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.



Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam