பருத்தித்துறை முதல் டிக்வெல்ல வரையான சைக்கிள் பயணம் ஆரம்பம் (Photos)
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியாக சர்வதேச சுற்றுலாகளை ஈர்க்கும் வகையில் பருத்தித்துறை முதல் டிக்வெல்ல வரையிலான சைக்கிள் பயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சைக்கிள் பயணம் நேற்று (29.10.2023) நள்ளிரவு 12 மணிக்கு பருத்தித்துறை, சற்கோட்டை முனை பகுதியில் இருந்து ஆரம்பமானது.
600 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணம்
36 மணித்தியாலங்களில் சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் குறித்த சைக்கிள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மாத்தறை மாவட்டம் - டிக்வெல்ல முனையை எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு சென்றடையும் வகையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தென்னிந்திய சுற்றுலாத்துறை அமைச்சின் இளைஞர்கள் மற்றும் சுற்றுலாவில் பங்கெடுக்க வந்த இளைஞர்கள் உள்ளடங்கலாக சர்வதேச சைக்கிள் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட 65 சைக்கிள் ஓட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.