நாட்டில் நிச்சயமாக ஒமிக்ரோன் அலை உருவாகும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிச்சயமாக ஒமிக்ரோன் திரிபு அலையொன்று உருவாகும் என களனி பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியளவில் இந்த ஒமிக்ரோன் அலை உருவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் ஒமிக்ரோன் அலை உருவாகியுள்ளதாகவும், இலங்கையிலும் இவ்வாறான அலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபின் தாக்கம் குறைவானது என்ற காரணத்தினால் வீடுகளிலேயே அவர்களுக்கு சிகிச்ச அளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பாக மூன்றாம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri