திவாலாகிறதா இலங்கை! சற்று முன்னர் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
நாடு திவாலாகும் நிலையில் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மீண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கையின் தரம் தாழ்த்தப்பட்டமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5% ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என குறிப்பிட்ட அவர், எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்தடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை இல்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஆட்டத்திற்கு முடிவுக்கட்டிய வொர்ட்டிங்.. இந்த வாரம் பெட்டியை தூக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா? Manithan