நாடு பாரதூரமான அனர்த்தத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது - திஸ்ஸ விதாரண
முழு நாட்டையும் தொடர்ந்து 14 நாட்கள் முடக்குவதன் மூலம் மாத்திரமே இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கோவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என வைரஸ் தொடர்பான பேராசிரியரான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நாட்டை 14 நாட்கள் தொடர்ந்தும் முடக்காமல் வைரஸ் பரவலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. இரண்டு, மூன்று நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவதால் எந்த பயனும் கிடைக்காது.
இதன் காரணமாக நாட்டை 14 நாட்களுக்கு முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாடு தற்போது பாரதூரமான நிலைமையில் இருக்கின்றது. நாடு அனர்தத்தை நோக்கி மிக வேகமாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
நிலைமையை தற்போது கட்டுப்படுத்தவில்லை என்றால், ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து விழும் நிலைமை ஏற்படும் எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.