நாடு படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது! - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சவால்களின் தன்மை அல்லது அளவு முக்கியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் தொடர்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏறக்குறைய இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனான கலந்துரையாடல் தொடரின் முதல் சுற்று கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி விரும்பிய இலக்குகளை அடைவதற்குத் தேவையான பலத்தை அளித்து தேசிய வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டம் குறித்து பெரும்பான்மையான மக்கள் சாதகமாக உள்ளனர். குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடையும் நோக்கத்துடன் சில பிரிவினர் பரப்பும் குற்றச்சாட்டுகளை வல்லுநர்கள் கடுமையாக நிராகரித்தனர்.
முழு உலகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இலங்கை திட்டமிட்டு முன்னேறி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட விவசாயத்திற்கான புதிய அணுகுமுறைக்கு இந்த துறைகளில் முழுநேரமாக ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக அத்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் எடுத்துரைத்ததோடு, இது தொடர்பாக தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு நிபந்தனையின்றி அரசுக்கு ஆதரவளிப்பதாக வலியுறுத்தினர்.
கல்வி, கொள்கை, சமூகவியல், விவசாயம், ஆராய்ச்சி, நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவம், பொறியியல் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri
