அரசாங்கத்தின் அதிமேதாவித் தனம்தான் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம்
அரசாங்கத்தின் அதிமேதாவித் தனத்தினால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எடுக்கப்பட வேண்டிய சரியான தீர்மானங்கள் உரிய நேரத்தில் எடுக்கப்படாத காரணத்தினால் ஒட்டுமொத்த நாடே இன்று மரண வீடாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்தக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான யோசனைகளையும் இந்த அரசாங்கத்தின் அதிமேதாவித் தனங்களினால் நிராகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றுக்கு சிறந்த தீர்வு சுதர்சன பானி என கூறிய ராஜாங்க அமைச்சர்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டை முடக்கியிருந்தால் இன்று பாரியளவு கோவிட் பரவுகையை கட்டுப்படுத்தியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று பரவுகைக்கு ஆசிரியர்களே காரணம் என பிரச்சாரம் செய்ய அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் வழங்கிய எந்தவொரு பரிந்துரையையும் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.