திருடன் என்ற கருத்து இல்லாதொழிக்கப்படும்: நாமல் சூளுரை
திருடன் என்ற கருத்தும், திருடனைப் பிடித்து ஆட்சிக்கு வருவோம் என்ற கோஷமும் எதிர்வரும் காலங்களில் இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்துள்ளார்.
பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கிராமிய அலகுகளிலிருந்து கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் (Mahinda Rajapaksha) ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும்.
குழப்பத்தில் மக்கள்
அதற்கு தேவையான தலைமைத்துவம் எம்மிடம் உள்ளதோடு அவற்றை செயற்படுத்துதற்கான நல்ல தலைமைகளும் உள்ளன.

அதேவேளை, இலங்கை அரசியலால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஒரு கட்சியில் இருக்கும் போது அதனை விசாரித்தவர்களும் அதே கட்சியில் உள்ளனர். இதனால் மக்களோடு நாமும் குழப்பத்தில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam