அனுரவுக்கும் ரணிலுக்கும் உள்ள டீலே நாட்டின் மிகப்பெரிய திட்டம்: சஜித் குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்து வருவதாக வாய்ச் சொல் தலைவர் லண்டன் சென்று குறிப்பிட்டுள்ளார் என அனுரகுமார திசாநாயக்கவை( Anura Kumara Dissanayake) எதிர்கட்சிதலைவர் சாடியுள்ளார்.
இது அப்பட்டமான பொய். திசைகாட்டியும் - யானைக்கும் இடையிலான டீலே இன்று நாட்டிலேயே மிகப் பெரிய திட்டதாகும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்கட்சிதலைவர் சஜித் பிரேமதாச,
“அரசியல் சூழ்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதமராக பதவி ஏற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போது, தான் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருவதால், அதனை நிராகரித்தேன்.
சஜித் பிரேமதாசவுக்கு டீல்
மக்களின் ஆசியுடனயே நான் பதவிக்குச் செல்வேன் என குறிப்பிட்டேன். நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருக்க விரும்பாத காரணத்தினால் தான் பின்னர் ஏற்பட்ட போராட்ட காலப்பகுதியில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ ஏற்க மறுத்தேன்.
பூரண முடியாட்சியைத் தருவதாக கூறினாலும், நாட்டை வங்குரோத்து செய்தவர்களுடன் சஜித் பிரேமதாசவுக்கு டீல் இல்லை. டீல் போடவும் மாட்டோம்.
வாய்ச் சொல் தலைவர் போல லண்டன், கனடா, அமெரிக்கா செல்வதை விட அனுராதபுரத்தில் விவசாயிகளுடன் இருப்பதே எனக்கு சிறந்தது.
சிவில் பாதுகாப்பு
பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கு பயன்படுத்தும் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று தன்னாலும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தவும் முடியும் என்றாலும், அந்த பணத்தில் தம்புத்தேகம தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்குவது அதனை விட பெறுமதியானது.
நாட்டிற்கு அர்ப்பணிப்போடு மகத்தான சேவையாற்றிய இராணுவ வீரர்கள் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பாதுகாப்போம்.
வீதிக்கு தள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை வழங்குவோம். நுண்நிதி கடன் வலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவோம். பயிர் சேதத்தைத் தடுக்க நடைமுறை மற்றும் வலுவான பயிர்க் காப்பீட்டு முறையை ஏற்படுத்தித் தருவோம்” எனறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
