திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும்: வி.மணிவண்ணன் (Video)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று (21.09.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை எழுச்சிபூர்வமாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.
பொதுக்குழுவால் நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபன் இனத்தின் அடையாளம் என்பதால், அவர் மக்களுக்கு சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.

நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்
இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விட மாட்டார்கள், குழப்புவார்கள். ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம் அதற்கான வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசாங்கம் குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri