யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் 51ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு யாழ். மாவட்ட 51ஆவது பிரிவின் இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்செயற்பாடுகளுக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்கான முழுமையான
ஒத்துழைப்புகளை தொடர்ந்து தாம் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக இராணுவ தளபதி
தெரிவித்தார்.
