தமிழர் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் புரியும் சீனர்!
இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில்,கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனமொன்று கடலட்டை பண்ணை அமைத்து செயற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் அந்த பகுதியில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் சீன நிறுவனம் ஒன்று தங்களின் கடற்பரப்பிற்குள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சீன நாட்டவர்களால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் கடலட்டை வளர்க்கும் ஒருவருடைய பெயரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் பண்ணை அமைத்துள்ளபோதிலும் பூநகரி பிரதேச செயலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடல் தொழில் திணைக்களத்தினதோ அனுமதி பெறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.