விரைவில் தடையற்ற மின்சாரம்! அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் 93 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
35,000 மெட்ரிக் ட்ன் பெட்ரோல் மற்றும் 37,500 மெட்ரிக் டொன் டீசலைப் பெறுவதற்காக இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவுள்ளது.
இதன்படி, நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், இதனூடாக தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மின்வெட்டை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
