பல பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி
2024 ஆம் ஆண்டில் 274.79 பில்லியன் ரூபாய் இலாபத்தை இலங்கை மத்திய வங்கி (CBSL) பதிவு செய்துள்ளது.
குறித்த ஆண்டில், வட்டி வருமானம், உணரப்படாத மறுமதிப்பீட்டு ஆதாயங்கள் மற்றும் விலை மாற்றங்களிலிருந்து உணரப்பட்ட ஆதாயங்கள் உட்பட வெளிநாட்டு நிதி சொத்துக்களிலிருந்து மத்திய வங்கி 110.55 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் உட்பட 10.51 பில்லியன் ரூபாய் செலவு
அத்துடன் விலை மாற்றங்களின் மீதான ஆதாயங்கள் உட்பட தேசிய நிதி சொத்துக்களை அண்டி 227.25 பில்லியன் ரூபாய் நிகர வருமானத்தை தேசிய நிதி சொத்துக்களிலிருந்து மத்திய வங்கி ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் மத்திய வங்கியின் பணிக்குழாம், சம்பளம் உட்பட 10.51 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்த செலவு 7.25 பில்லியன் ரூபாயாகும்.
மொத்தத்தில், இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டில் ரூ. 114.43 பில்லியன் ரூபாய் நட்டத்திற்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |