நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் இதுவே! சனத் ஜயசூரியவின் கருத்து
நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள் உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள், இது கலவரம் தொடர்பானது இல்லை, இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு மாதகாலமாக இலங்கையர்களாகிய நாங்கள் மௌனமாக துயரில் சிக்குண்டுள்ளோம். அனைத்தும் அனைவரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் அந்தநிலையை அடைந்துள்ளோம். நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம்.
நாங்கள் ஒருபோதும் மத இன சாதி அரசியல்கட்சி அடிப்படையில் பிளவுபடக்கூடாது.
நாங்கள் ஒரு மக்களாக ஐக்கியப்படுவோம் எங்களுக்காக எங்கள் பிள்ளைகளிற்காக எதிர்கால சந்ததிக்காக எழுந்துநிற்போம்,
இது அவர்களும் நாங்களும் பற்றிய விடயமில்லை, அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள் உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள் இது கலவரம் தொடர்பானது இல்லை,இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது என குறிப்பிட்டுள்ளார்.



