ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (26) இடம்பெற்றுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
அரசு தரப்பு சாட்சியங்கள்
இந்த விசாரணையின் போது, அரசு தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதன் பிறகு நீதிபதி வழக்கை ஜூன் 23 வரை மேலும் விசாரணைக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
