40 பேரின் உயிரை காப்பாற்றி பேருந்து சாரதி
பதுளை நோக்கி பயணித்த பேருந்திற்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளது.
நேற்று காலை ஸ்பிரிங்வேலி பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 1000 அடி உயரமான பள்ளத்தில் இருந்து கீழே விழவிருந்தது.
எனினும் அந்த சந்தர்ப்பத்தில் சாரதியின் சாமர்த்தியத்தால் நொடிப்பொழுதியில் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு 40 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பேருந்து கவிழ்ந்திருந்தால் கீழே உள்ள வீடுகள் மீது விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri