வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil rajapaksa) நிதியமைச்சர் என்ற வகையில் முதல் முறையாக வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார். இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு செலவு 5 ஆயிரத்து 134 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 521 பில்லியன் ரூபாய் அரச கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படும் என நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே இம்றை வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் வரி விதிப்புகள் அதிகரிக்கப்படலாம் எனவும் நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
