சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி:ரிஷி சுனக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம், அந்த நாட்டு பொலிஸார் தண்டப்பணம் அறவிட்டுள்ளனர்.
தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த பிரதமர், பின்புற ஆசனத்திலிருந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வீடியோ
இந்த வீடியோவில், அவர் ஆசன பட்டி அணிந்திருக்காமை உறுதியான நிலையிலேயே, பொலிஸார் அந்த நாட்டு பிரதமருக்கு தண்டப்பணம் விதித்துள்ளனர்.
தமது வாகனத்தில் ஆசன பட்டி இருந்தும், அதனை அணி தவறும் பட்சத்தில், அது பிரித்தானிய போக்குவரத்து சட்டத்திற்கு அமைய குற்றமாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமரிடம் 100 பவுண் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர், மன்னிப்பு கோரியுள்ளார்.
அபராதம்
மேலும், குற்றம் சாட்டப்பட்டால், நீதிமன்றம் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கலாம்.
அரசாங்கத்தில் இருக்கும்போது சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு கோவிட் சட்டத்தை மீறியதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.