சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது காரில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாட்டில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
அதை கட்ட தவறியவர்கள் நீதிமன்றின் மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 100-க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப்படி கேமராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது.
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் ரிஷி சுனக்
அவரது காரின் முன்னும் பின்னும் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக்காக சென்றனர். இதில் பிரதமர் ரிஷிசுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
ஒரு சிறிய கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார். இது தவறு என்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காரில் செல்லும் போது அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
