ஜனாதிபதி ரணிலுடன் தொலைபேசியில் பேசிய பிரித்தானிய அமைச்சர்
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான அமைச்சர் லோர்ட் (தாரிக்) அஹமட், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதார நிலைமை, அமைதியான போராட்டங்கள், ஊடகச் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரித்தானிய அமைச்சர் லோர்ட் (தாரிக்) அஹமட் தெரிவித்துள்ளார்.
Constructive call with President Ranil Wickremesinghe @RW_UNP today about the concerning security & economic situation in Sri Lanka ?? Also focused on rights to peaceful protest,media freedom,human rights&justice. UK ?? will continue to support Sri Lanka through these challenges. pic.twitter.com/ZfI6dGAteZ
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) July 23, 2022