ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்
நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அதீத கவனத்துடன் செயற்படுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆகையினால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.