கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
கிளிநொச்சி - புது ஐயங்கன் குளத்தில் நீராடச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக் கொண்டிருந்ததாகவும், அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த நபரை தேடும் பணிகள் இன்றும் இடம்பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த நபர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்துலிங்கம்
அருமைநாதன் என
பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri