மகாவலி ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை
தனது வீட்டில் இருந்து காணாமல் போன ஆறு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று மகாவலி ஆற்றில் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி டேலி வீதியில் வசிக்கும் அகலின் நாரங்கலா என்பவரின் உடல் மகாவலி ஆற்றில் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் மகள் கடந்த 10ம் திகதி முதல் தனது தாயை வீட்டில் இருந்து காணாமல் போனதாக நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாவலப்பிட்டி, பட்டுனுப்பிட்டியவில் மகாவலி ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
நாவலப்பிட்டி மாஜிஸ்திரேட் நிலந்த விமலரத்ன உடலை ஆய்வு செய்து பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட மருத்துவமனை நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri