காரைநகர் கடற்பரப்பில் ரோந்து கப்பல் மோதி கடலில் மூழ்கிய விசைப் படகு
காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டபோது, இலங்கை கடற்படையின் கப்பல் மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குறித்த மீனவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் அவர்களில் சுகந்திரன், சேவியர் ஆகிய இருவரையும் மீட்ட இலங்கை கடற்படையினர் படகு ஓட்டியான ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
