இலங்கையில் உதயமானது பாரதீய ஜனதா கட்சி
இலங்கையில் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் ஓர் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியின் தலைவராக பிரபல தொழிலதிபர் வீ.முத்துசாமி கடமையாற்றுவார் எனவும், செயலாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் கடமையாற்றுவார் எனவும், நிதிச்செயலாளராக எம். டிலான் கடமையாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியானது தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதே கட்சியின் பிரதான நோக்கம் என கட்சியின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிக்கும், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சிக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பெயர் நன்றாக உள்ளது அதனால் இந்தப் பெயரை சூட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்சியின் செயற்பாடுகள் மலையகம், வடக்கு,கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் எல்லா பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.