2022 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடம்! வெளியான பட்டியல்
2022 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற உகந்த இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலானது சுற்றுலாப்பயணிகள் விரும்பும் பிரபலமான இடங்கள், மக்கள் தற்போது அதிகம் செல்ல விரும்பும் பகுதிகள், வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியிடங்களுக்கு செல்வோருக்கு பிடித்த இடங்கள், பல்வேறு உணவுகளை விரும்புவோருக்கு பிடித்த இடங்கள், பனிச்சறுக்கு விளையாட விரும்புவோருக்கு பிடித்த இடங்கள் மற்றும் நகரங்களை விரும்புவோருக்கு பிடித்த இடங்கள் என ஏழு பிரிவுகளின் கீழ் பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
2020 நவம்பர் 1 ஆம் திகதி முதல், 2021 அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள் தெரிவித்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உலகிலேயே துபாய் முதலிடம் பிடித்துள்ளது.லண்டன், ஐரோப்பா என்ற பிரிவில் முதலிடத்தையும், மொத்தமாக உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, உலகப் பட்டியலில் மெக்சிகோவிலுள்ள Cancun மூன்றாவது இடத்தையும், இந்தோனேசியாவிலுள்ள பாலி நான்காவது இடத்தையும், கிரேக்கத்தீவுகளில் Crete ஐந்தாவது இடத்தையும்,அமெரிக்கா 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
முதல் பத்து இடங்களுக்குள் வந்த மற்ற இடங்கள், ரோம் (ஆறாவது இடம்), மெக்சிகோவின் Cabo San Lucas (ஏழாவது இடம்), துருக்கி தலைநகரமான இஸ்தான்புல் (எட்டாவது இடம்), பாரீஸ் (ஒன்பதாவது இடம்) மற்றும் எகிப்திலுள்ள Hurghada (பத்தாவது இடம்) ஆகும்.
அதாவது, 2020 நவம்பர் 1ஆம் திகதி முதல், 2021 அக்டோபர் 31 வரை உலகச் சுற்றுலா சென்றவர்கள், இந்த இடங்களை சிறந்த இடங்கள் என தெரிவித்துள்ளதன் அடிப்படையில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.