அரசாங்கத்தின் சிறந்த நடிகர் தொடர்பில் எதிர்கட்சி வெளியிட்டுள்ள தகவல்
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த மிக சிறந்த நடிகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்தானந்த தற்பொழுது திரைப்படங்களில் நடிக்கின்றார். சாரமொன்றையும் உடுத்திக்கொண்டு வயல்களுக்கு செல்கின்றார். இதனை திட்டமி ட்ட அடிப்படையில் செய்கின்றார். அவ்வாறு இல்லாவிட்டால் அவருக்கு சாரமின்றியே திரும்பி வர நேரிடும்.
விவசாயிகள் எனக் கூறிக்கொள்ளும் சில நடிகர்களிடம் சென்று இம்முறை விளைச்சல் எவ்வாறு, வருமானம் எப்படி என கேட்கின்றார். அந்த நடிகர்கள் நல்ல விளைச்சல் கடந்த ஆண்டை விட அறுடையும் வருமானமும் அதிகம் என கூறுகின்றார்கள்.
ஒட்டுமொத்த நாடே 50 வீத அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறுகின்ற போது அமைச்சர் மஹிந்தானந்த நாடகம் நடிக்கின்றார் என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam