யாழில் கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய மதுபானசாலை பொலிஸாரால் முற்றுகை
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பின் வீதியில் பயணத்தடை வேளையிலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக இயங்கி வந்த பிரபல மதுபானசாலை யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையின் போது சட்டவிரோதமாக மதுபான கொள்வனவுக்கு வந்த ஒருவரும் மதுபானசாலை முகாமையாளர் மற்றும் மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகுதி மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 1/4 போத்தல் 100உம் முழுபோத்தல் 4 பியர் 8உம் கைப்பைற்றப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணதடையின் போது மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த போதிலும் குறித்த மதுபானசாலையில் அதிக விலைக்கு மதுபான விற்பனை இடம்பெற்றதாக மது பிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த மதுபானசாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து 300 மீற்றர்
தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam