சமூக வலைத்தளங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தடை முட்டாள்த்தனமானது:ஆளும் கட்சியின் உறுப்பினர்
சமூக வலைத்தளங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானது முட்டாள்த்தனமான செயல் எனவும் அரசாங்கத்தில் பல தவறுகள் நடந்துள்ளது எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அமைச்சரவை எடுக்கும் தவறான முடிவுகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்க முயற்சித்ததாகவும் இது சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவதற்குரிய காலம் வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் என்ற வகையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். இது தொடர்பாக அதிகரிகள் நேர்மறையாக சிந்தித்து பார்க்க வேண்டும் என கூறுவது நகைப்புக்குரியது எனவும் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




