சவேந்திர சில்வா மீதான தடை ஆராயப்படும்! - பிரித்தானிய எம்.பி ஜெனெட் டாபி உறுதி

Shavendra Silva United Kingdom War crime Janet Daby
By Murali Oct 18, 2021 09:19 PM GMT
Report

யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட்டவர்களை பிரித்தானியா தடை செய்வது தொடர்பான மற்றுமொரு இராஜதந்திர சந்திப்பு ஒன்று, லூசியம் கிழக்கு பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான ஜெனட் டாபியுடன் (Hon Janet Daby) இன்று இடம்பெற்றுள்ளது.

மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ITJP அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison), மற்றும் தெழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவில் தடைசெய்வது பற்றி எதிர்வரும் 21 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெறவுள்ள, மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) முதலாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் கீத் குலசேகரம் முன்வைத்தார்.

பிரான்சிஸ் ஹரிசன், தனது உரையின் போது, ITJPயினால் சமர்ப்பிக்கப்பட்ட சவேந்திர சில்வா தொடர்பான 50 பக்க குற்றப்பத்திரிகை பற்றியும், தற்போது தொடரும் சித்திரவதை பற்றியும் எடுத்துக்கூறி, சவேந்திர சில்வாவை தடை செய்வது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்தார்.

சென் கந்தையா தனது உரையில் பிரித்தானிய நாடாளுமற்றில் இதுதொடர்பான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதற்கான உதவியையும் கோரியிருந்தார்.

இலங்கையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் மிக அண்மையில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்கள் சார்பில் சதேந்லொயிற்றன் புயலேந்திரன் மற்றும் வசிகரன் சதாசிவம் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்து, இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதை உறுதிசெய்ததுடன், அதனை நிறுத்த பிரித்தானியா உடன் நடவடிக்கை எடுத்து, சவேந்திர சில்வா போன்றவர்களை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது ஜெனட் டாபி அவர்கள் அனைத்து கருத்துக்களை உள்வாங்கியதுடன், புதிதாக உருவாகியுள்ள மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இதனை ஆராய்வதாகவும், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பிரச்சனையை விவாதிக்க அனுமதி பெற ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதியளித்தார். மேலும், தான் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், கடத்தல்கள் மற்றும் துன்பங்களைப் பற்றி வெளியுறவு அலுவலகம் நேரடியாக கேட்டு அறியக்கூடிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானியா வாழ் தமிழர் சார்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ள All-Party Parliamentary Group for Tamils (APPGT) இல் தன்னை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்துளார்.

மேலும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான ஊடகங்கங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இது இளையோராகிய எமது முயற்சிக்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றியாகும் என்றும் இவ்வாறான சிறு படிகள் எமக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்றன என்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முதன்மை செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தன் தெரிவித்தார்.

அவரின் ஒருங்கிணைப்பில், கோவிட் காரணமாக மெய்நிகர் வழி (zoom) வழியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் விதுரா விவேகானந்தன், ரஜூவன் பவளகாந்தன், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், கிறிஸ்டி நிலானி காண்டீபன், சுபதர்ஷ வரதராஜா, சுபமகிசா வரதராஜா, ரஜூவன் ரவிக்குமார் மற்றும் வசிதரன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறன தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய இளையோரின் விடா முயற்சியால் இதுவரை 31 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 மே 2021 பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணையில் (Early Day Motion 64) கையெழுத்திட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US