எதிர்ப்பு எண்ணத்தில் இருந்து விலகி, ஏற்கும் மனப்பான்மை வளர்க்கவேண்டும் - மெகபூபா முப்தி கோரிக்கை
இந்திய கிரிக்கட் அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தானிய அணியை, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி (Virat Kohli) வாழ்த்தியமையை போன்று எதிர்ப்பு எண்ணத்தில் இருந்து விலகி, ஏற்கும் மனப்பான்மை வளர்க்கவேண்டும் என்று இந்திய மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி (Mehbooba Mufti) கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானிய அணி வெற்றிப்பெற்றதை அடுத்து அந்த வெற்றியை இந்திய - காஷ்மீரிலும் மக்கள் கொண்டாடினர்.
இதனையடுத்து வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மக்கள் துரோகிகள் என்ற விமர்சனங்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதனைக் கண்டித்துள்ள மெகபூபா முப்தி, காஷமீர் துண்டாக்கப்பட்ட போது எத்தனைப் பேர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடத்தினார்கள் என்பதை யாரும் மறக்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
