மனித உரிமைகள் உயஸ்தானிகர் அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒப்புவித்துள்ளதாக குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயஸ்தானிகர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம் பெயர் குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாக்கித் தந்த அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயாமல், அப்படியே ஒப்புவித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் தேசிய பொறிமுறைகளை கேள்விக்குட்படுத்தியதன் ஊடாக, மனித உரிமைகள் உயஸ்தானிகர் மிச்செல் பெச்லே, ஸ்ரீலங்கா அரசியல் அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில், மனித உரிமைகள் உயஸ்தானிகர் மிச்செல் பெச்லே ஸ்ரீலங்கா தொடர்பாக வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மிச்செல் பெச்லெட் தெரிவித்த அனைத்து விடயங்களும் தேசிய ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்களேத் தவிர சர்தேசத்தின் தலையீட்டுடன் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் அல்ல, நாம் 46இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், எந்தளவு பொறுப்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் மனித உரிமைகள் பேரவையின் நோக்கங்களை மீறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை ஒரு நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்த முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமேத் தவிர, தேசிய பொறிமுறைகளை கேள்விக்குட்படுத்த முடியாது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய விடயத்தை அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அதாவது 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார்தை அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
அதனைவிட இந்த மன்னிப்பிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணை நிறைவடைவதற்குள் இதுத் தொடர்பில் கேள்வி எழுப்பும் உரிமை அல்லது மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை.
ஆகவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வாசித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஸ்ரீலங்காவில் இவ்வாறான அறிக்கைகளை உருவாக்கிக்கொடுக்க செயற்படுகின்றன.
இதுத் தொடர்பில் அவர் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். 104 நாடுகள் அவசரகால நிலையை, அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. மக்கள் நலன் கருதி இது அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே ஸ்ரீலங்காவிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் அவர் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும். ஸ்ரீலங்காவை துவேஷத்துடன் நோக்கும் அமைப்புகள், குறிப்பாக புலம்பெயர் புலி அமைப்புகள் எழுத்தரும் அறிக்கைகளை அவர் முன்வைக்கின்றார். அதனாலேயே அவர் பயங்கரவத தடைச் சட்டம் தொடர்பில் பேசுகின்றார்.
இந்த சட்டத்தின் ஊடாகவே நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க முடிந்தது. சட்டத்தை மாற்றியமைக்குமாறும் அவர் அறிவுறுத்துகின்றார். அவர் ஏனைய நாடுகளின் செயற்பாட்டுடன் ஸ்ரீலங்கா ஒப்பிட்டு பார்க்கவில்லை.
நாட்டில் இடம்பெறும் சாதகமான விடயங்கள் தொடர்பில் அவர் அவதானம் செலுத்தவில்லை. அங்குதான் அவருக்கு பிழைத்தது. ஸ்ரீலங்கா இந்த அறிக்கையை முற்றாக நிராகரிக்க முடியும்.
எனினும் எந்தளவிற்கு ஸ்ரீலங்கா அதற்குத் தயாராக இருக்கின்றது எனத் தெரியவில்லை. யஸ்மின் சூக்கா, அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் அறிக்கைகளை உருவாக்கிக் கொடுக்கின்றார்கள். அதனையே அவர் முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் செயற்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்
ஐ.நாவை இனியும் ஏமாற்ற முடியாது! - இலங்கை அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
இலங்கை மீதான பெச்லட் அம்மையாரின் காட்டமான அறிக்கை! இன்று பதிலளிக்கிறது இலங்கை அரசு