நெல் கொள்வனவு செய்ய தனியாருக்கு அனுமதி : இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிருப்தி
நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிக்கிறது என இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இன்று 31.01.2024 கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விளைச்சலில் பாரிய வீழ்ச்சி
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த காலபோக செய்கையில், விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்டு நிற்கின்ற நேரத்தில் அரசாங்கம் நெல்லையும் கொள்வனவு செய்யாது தனியாருக்கு வழங்கினால், தனியார் நினைத்த விலையில் கொள்வனவு செய்வார்கள்.
தனியார் இன்னும் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வார்கள். இதன் காரணமாக
விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
