நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள ஆப்கான் ஜனாதிபதி
தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றும் விளிம்பில் இருப்பதால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா காணொளியொன்றின் ஊடாக அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிபடுத்தியுள்ளார்.
அதேநேரம் அஷ்ரப் கானி தலைநகர் காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துணைத் தலைவர் அம்ருல்லா சலேவும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்கள் 10 நாட்களில் தலிபான் தீவிரவாதிகளின் வசமானமையினால் கானி பதவியை இராஜினாமா செய்ய அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந“தமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam