அயர்லாந்து சுகாதாரக் கட்டமைப்பில் நெருக்கடி
வடக்கு அயர்லாந்தின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நிலவி வரும் கடுமையான நெருக்கடி காரணமாக, உயிருக்குப் போராடும் நோயாளிகளில் யாருக்கு முன்னுரிமை என்பதைத் தீர்மானிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருவதாக ரோயல் கொலேஜ் ஒஃப் எமர்ஜென்சி மெடிசின் அமைப்பு தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, நிர்ணயிக்கப்பட்ட நான்கு மணி நேரம் மற்றும் 12 மணி நேர இலக்குகளுக்குள் எந்தவொரு அவசர சிகிச்சைப் பிரிவும் நோயாளிகளைப் பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வடக்கு அயர்லாந்தின் வரலாற்றிலேயே இதுவே மிக மோசமான நிலை என்று வர்ணித்துள்ள RCEM, அங்குள்ள சூழல் "முற்றிலும் திகிலூட்டுவதாக" இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுவிஸ் தூதரகம் மீண்டும் திறப்பு: இஸ்ரேலுக்கான ஆயுத உரிமங்கள் இரத்து
நிதி ஒதுக்கீடு
இந்த இக்கட்டான நிலை குறித்துப் பேசிய மருத்துவர் மைக்கேல் பெர்ரி, நோயாளிகளைக் கவனிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பணிச் சூழல் காரணமாக செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, ஆல்ட்நாகெல்வின் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகச் சராசரியாக 21.5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததும், பல ஆண்டுகளாக ஒரு நிலையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாததுமே இந்த "நிரந்தர நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam