பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை கிடைக்காமையால் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
கொழும்பு, டேம் வீதியில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை கிடைக்காமையால் மரபணு பரிசோதனையினை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சடமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகவே இன்றைய தினம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் தாயிடம் இருந்தும், சடலத்திலிருந்து நேற்று மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் ஒத்திசையுமானால் சடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு, டேம் வீதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குருவிட்ட - தெப்பனாவை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவர் என கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சடலத்தின் தலையை கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் தலை கிடைக்காமையால் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
