அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது: சாணக்கியன்

Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Rusath Apr 20, 2023 08:56 AM GMT
Report

அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மண்முனை பற்று - தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் (19.04.2023) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கே செயற்படுத்தப்பட வேண்டும். மாறாக அவர்களுக்கு அந்தத் திட்டங்கள் பாதகமாக அமையக் கூடாது என்பதுடன் அரசியல்வாதிகள் அதற்குத் துணைபோகக் கூடாது.

அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது: சாணக்கியன் | The Act Of Providing Money To The Government

எந்தப் பிரச்சினையும் எமக்கு இல்லை

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்குமாறே அமையவேண்டும். 

மக்களைச் சுரண்டி உழைக்கும் திட்டங்கள் எமக்குத் தேவையில்லை. எனவே அரசாங்கத்திற்கு இலாபம் உழைக்கும் திட்டங்களை அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தக்கூடாது.

அதேவேளை, அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபம் கருதியும் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் எனது எதிர்ப்புக்களைத் தொடர்ந்தும் வெளியிடுவேன். 

உதாரணமாக தென்எருவில் பற்று பிரதேசத்தில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த படகுப்பாதைக்கு பணம் அறவிடப்படவில்லை. ஆனால் தற்போது திடீரென மக்களிடம் 50 ரூபா பணம் அறவிடப்படுகின்றது.

நாம் பணம் அறவிட வேண்டாம் எனக் கூறவில்லை. தற்போது காணப்படுகின்ற நெருக்கடி நிலமைகளின் மத்தியில் மக்களிடம் பணம் அறவிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் பணம் அறவிட வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் புதிய படகுப் பாதையை அமைத்த பின்னர் பணம் அறவிடுவதில் எந்தப் பிரச்சினையும் எமக்கு இல்லை. 

அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது: சாணக்கியன் | The Act Of Providing Money To The Government

அரசாங்கத்திற்கு இலாபம்

தற்போதுள்ள அந்தப் படகுப் பாதையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. பல வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தில் பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 

அதிகமாகப் பாடசாலை மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். 

இதுவரை காலமும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த படகுப்பாதை சேவைக்கு ஏன் தற்போது பணம் அறவிடப்படுகின்றது. 

ஒரு சில அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு இலாப முழைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.

எனவே, தற்காலிகமாகவேனும் இந்தப் படகுப்பாதை விடயத்தில் பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது: சாணக்கியன் | The Act Of Providing Money To The Government

முடிவுகளை எடுக்க வேண்டும்

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

இந்த விடயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறக்கூடாதென்பதில் கவனமாக இருக்கவும் வேண்டும் என்பதுடன் குறித்த விடயத்தில் மட்டுமல்ல அனைத்து திட்டங்களிலும் ஊழல் மோசடிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஒரு திட்டம் மக்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றபோது அது மக்களது நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். இந்தப் பணம் வசூலிக்கும் முறை மூலம் இந்தப் பாதையூடாக பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே அதிக சிரமங்களை எதிர்கொள்வார்கள். 

பொறுப்பு வாய்ந்த அமைச்சர் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலையிட்டு இந்த விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் எந்த முடிவுகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

எனவே, உடனடியாக இந்த பணம் அறவிடும் செயற்பாடுகளை நிறுத்தி அதற்கான மாற்று ஏற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்துத் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது: சாணக்கியன் | The Act Of Providing Money To The Government

மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது

வெறுமனே மக்கள் பணத்தினை வீணடிக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். 

மக்களைப் பாதித்து அவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி நல்ல பெயர் எடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக்கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கப்போவதுமில்லை.

இந்த விடயத்தில் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பிரதேச செயலாளர் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். அத்துடன் இந்தப் பணம் வசூலிக்கும் நடைமுறையினை முன்னெடுக்க முடியாதென்பதை உரியத் தரப்பினருக்கும் எடுத்துக்கூற வேண்டும். 

தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என்பதில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US