அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய சபாநாயகரை நியமிக்குமாறு கோரிக்கை
அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri