பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆபிரிக்காவில் உயிரிழப்பு
பிரித்தானிய அதிகாரிகளால் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், ஆபிரிக்க நாடான ஈஸ்வாத்தினியில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி 'KP' எனக் குறிப்பிடப்பட்ட 36 வயதான குறித்த நபர், கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி ஈஸ்வாத்தினியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியக் காவலில் இருந்த காலத்தில் இவர் பலமுறை உயிர் மாய்ப்புக்கு முயன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
கடந்த 2021 ஒக்டோபரில், டீகோ கார்சியாவில் படகுப் பழுது காரணமாகச் சிக்கிய நிலையில் அரச கடற்படையினரால் மீட்கப்பட்ட இவர், அங்குள்ள முகாமில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு 2024இல் சர்வதேச பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும், பாலியல் அத்துமீறல், தீ வைப்பு போன்ற குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி பிரித்தானியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு 2025இல் அவரது மேல்முறையீட்டு மனுவையும் பிரித்தானிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீவில் வெளிச்சமில்லாத பொலிஸ் அறையிலும், துணி துவைக்கும் அறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த இவரது நிலை குறித்து ஐ.நா அகதிகள் முகவரகம் கவலை வெளியிட்டிருந்தது.
இதன்பின்னர் உயிர் மாய்ப்பு முயற்சிகளையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக பஹ்ரைனுக்கு மாற்றப்பட்டு, பின்னர் மாலைத்தீவு வழியாக ஈஸ்வாத்தினிக்கு நிரந்தரக் குடியமர்வு ஒப்பந்தத்தின்கீழ் அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri