இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு: கண்டனம் தெரிவித்துள்ள சட்டத்தரணி
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரகம் இணைந்து நடத்தும் ''இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல்'' எனும் நிகழ்விற்கு சட்டத்தரணி தம்பையா ஜெயரட்னராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவையிடம் நேற்று (18.03.2023) அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரணையுடன் இலங்கைவாழ் இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் என தலைப்பிடப்பட்ட நிகழ்வொன்றில் அழைப்பிதலை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
இந்நிலையில் மலையக மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் இலங்கைவாழ் இந்தியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மலையக மக்களாகிய நாம் பல உயிர் தியாகங்கள் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணி வேராக இருக்கின்றோம்.
நாம் இந்தியர்கள் அல்ல, இது எமது நாடு, நாம் இந்த நாட்டின் குடியுரிமையை பெற்றவர்கள், எமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
நினைவேந்தல் எனும் சொல்லுக்கு பொருள் தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்விற்கு பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தலைமை தாங்குவது எமக்கு கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
