தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (Photos)
தையிட்டி சட்ட விரோத விகாரை கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டமானது, நாளை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அந்தவகையில், நேற்று (29) மற்றுமொரு கட்டப்போராட்டத்தை மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி., ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோருடன் கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தினமான நாளைய (30) போயா பொதுவிடுமுறையை மையப்படுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கை அடிப்படையில் ஜனநாயக ரீதியாகவும் சட்ட ஒழுங்குகளை மீறாத வகையிலும் போராட்டக் கலாசாரத்தை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்க்கவும் இல்லை. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுவாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி எங்களுடைய பூர்வீக பிரதேசம். இது சைவத்தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி. இந்த காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருக்கின்ற படியால்தான் நாங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இங்கே தமிழ் மக்களுடைய பூர்வீக காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரியை அமைத்திருப்பதை தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இங்கே சைவக் கோயில் இருந்ததற்கான வரலாறு உள்ளது. ஒரு சாதாரண சிங்கள குடிமகன் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு விரும்பி வந்து வடகிழக்கிலே காணி வாங்கி வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு செய்கின்ற நோக்கோடு, தங்களுடைய மக்களுடைய அடையாளத்தை தகர்ப்பதற்காக வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
அந்த நோக்கோடு வருகின்ற விகாரைகளையும் எதிர்ப்போம்.
அந்த வகையில் நாங்கள் தையிட்டி விகாரையை எதிர்க்கின்றோம். எதிர்த்துக் கொண்டே
இருப்போம் ஏனென்றால் இது எங்களுடைய இனத்தினுடைய எதிர்கால இருப்பு
சம்பந்தப்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் நாளை மாலை 7.00 மணி வரை தொடரும் என்று முன்னணி அறிவித்துள்ள நிலையில், விகாரை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்- கஜிந்தன்














தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 40 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
