சுதந்திரக் கட்சியில் இருந்து தயாசிறியை வெளியேற்ற இரகசிய திட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
நான் வெளியேற விரும்புகிறேன்
“முன்னாள் ஜனாதிபதி என்னை கட்சிக்குள் வைத்திருக்க விரும்பவில்லை என்றால், நிர்வாக சபை என்னை கட்சிக்குள் வைத்திருக்க விரும்பவில்லை என்றால், நான் வெளியேற விரும்புகிறேன்.
நான் கட்சியை விட்டு வெளியேர வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை. என்னை வெளியேற்ற விரும்புபவர்கள் மேல் மட்டத்தில் உள்ளவர்கள். அதற்கு நான் அஞ்சவில்லை.
மேலும், என்னால் அவர்களின் பெயர்களை குறிப்பிட முடியாது. அவர்கள் இந்த பலியை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்த முற்படுகின்றனர்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




