4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு
வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரச காடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத்திணைக்களம் சார்பாக முன்னிலையாகியிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பாக மாவட்ட அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எனினும் குறித்த விடயம் தொடர்பாகப் பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கு.திலீபன், நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்குப் பதில் சொல்லவேண்டும்.
எனவே அரச அதிபருக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாகத் தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.



