தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு அனுமதி கிடைத்தமை குறித்து பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு
சம்பள நிர்ணயசபையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்க அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், துணைத் தலைவரும் பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபாய் நாளாந்த சம்பளமும் 100 ரூபாய் கொடுப்பனவும் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரச தோட்ட நிறுவனங்கள் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சம்பளத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan