இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த வடமாகாண ஆளுநர்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.123 கோடி மதிப்பில் உணவு, பால் பவுடர், மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனுமதி வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா சென்ற வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (30) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.
இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து எந்த மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு பரிசீலனை நடத்தி வருகிறது.
மேலும் தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி
வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்.
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு
பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.”
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam