முல்லைத்தீவில் 17 வயது சிறுவனை காணவில்லை : பொாலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு , பிலக்குடியிருப்பு, பகுதியை சேர்ந்த ர.ரதன் (17 வயது) என்ற சிறுவன், கடந்த 26ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் போது தனது தந்தையையும், பின்னர் தாயையும் இழந்த ரதன், தனது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த நிலையில், வெட்டில் ஏற்பட்ட சிறு முரண்பாட்டினால் வீட்டை விட்டு சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிறுவன் எங்கு சென்றுள்ளார் என்பது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவரைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு - 0764643116

குறித்த சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan